எருது விடும் விழா 12 பேர் படுகாயம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, அகலக்-கோட்டை - கல்லுப்பாலம் கிராமங்களுக்கு இடையே, மகாதேஸ்-வரா சுவாமி கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்-னிட்டு, நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை எருது விடும் விழா நடந்தது. அஞ்செட்டி, தேன்க-னிக்கோட்டை, ஓசூர் தாலுகா மட்டுமின்றி, தர்மபுரி மற்றும் கர்நா-டகாவில் இருந்து மொத்தம், 251 காளைகள் பங்கேற்றன.விழா திடலில், ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுப்புகளை இளைஞர்கள் எடுத்தனர். காளைகளை பிடிக்க முயன்ற, 12 பேருக்கு காயம் ஏற்-பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தேன்-கனிக்கோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால், தேன்கனிக்கோட்டை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும்
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 30,159 மாணவர்கள் பிளஸ் 1ல் 30,499 பேர் தேர்வில் பங்கேற்பு
-
பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு
-
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கூட்டம்; அ.தி.மு.க., - த.வா.க.,வினர் வெளிநடப்பு
-
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
-
வணிக சிலிண்டர் விலை உயர்வு; ஒரு சிலிண்டர் ரூ.1,965