மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவர் கைது

திருப்பத்துார்: திருப்பத்துாரில், குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கத்-தியால் வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்-தனர்.


திருப்பத்துார், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரமேஷ், 53, இவரது இரண்டாவது மனைவி தீபா, 35. இவரது நடத்தையில் ரமேஷூக்கு சந்தேகம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு தீபா, அப்பகுதியில் உள்ள ரமேஷின் தங்கை வரலட்சுமி வீட்டிற்கு துாங்க சென்றார். அப்-போது ரமேஷூக்கும், தீபாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரமேஷ், தீபாவை கத்தியால் சரமாரி வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், அங்கி-ருந்து ரமேஷ் தப்பினார். திருப்பத்துார் டவுன் போலீசார் வழக்குப்-பதிவு செய்து, தப்பி ஓடிய ரமே ைஷ நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement