'ஸ்கேன்' மையத்தில் கரு பாலினம் அறிவிப்பு அரசு மருத்துவர், 8 செவிலியர் 'சஸ்பெண்ட்'

சேலம்: 'ஸ்கேன்' மையம் நடத்தி, கருவில் உள்ள குழந்தை பாலினத்தை கண்டறிந்து கூறிய விவகாரத்தில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்-துவர், 8 செவிலியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
சேலம், வீராணத்தில் உள்ள 'பசுபதி ஸ்கேன்' மையத்தில், கருவில் உள்ள குழந்தை பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக, சுகாதார துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது. குறிப்பாக கிருஷ்-ணகிரி மாவட்டத்தில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் ஏராள-மானோர், இங்கு வந்து பரிசோதித்து செல்வது தெரிந்தது. இதனால் கடந்த, 25ல், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், அது உறுதி செய்யப்பட்-டது.
அந்த மையத்தை, ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப நிலைய, தற்காலிக செவிலியர் கலைமணி நடத்தியதும் தெரிந்தது. இவர்கள் பாலி-னத்தை கண்டறிந்து கூற, கர்ப்பிணியரிடம், 15,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்ததும் தெரிந்தது. இதனால் மையத்துக்கு, 'சீல்' வைத்த அதிகாரிகள், அங்கிருந்த கருவிகள், ஆவணங்களை பறி-முதல் செய்தனர். தொடர்ந்து வீராணம் போலீசில் புகார் அளித்-தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
முத்தமிழ், கலைமணி மட்டுமின்றி அவர்களுக்கு உடந்தையாக இருந்த கிராம சுகாதார செவிலியர் அம்பிகா ஆகியோர், இரு நாட்களுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மேலும் கலைமணியை, 'டிஸ்மிஸ்' செய்ய, உயர் அலுவலர்களுக்கு பரிந்-துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ இணை இயக்கு-னர்கள் மீனாட்சி சுந்தரி, நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் அடங்கிய குழுவினர் விசாரித்தனர்.
அதில் மையத்துக்கு உடந்தையாக செயல்பட்ட, சேலம் மற்றும் ஆத்துாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்க-ளாக பணிபுரிந்த வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைச்செல்வி, மகேஸ்வரி ஆகியோரையும், 'சஸ்பெண்ட்' செய்து சுகாதார அலு-வலர்கள் உத்தரவிட்டனர்.

Advertisement