குதிரை பந்தயம் இன்று துவக்கம்

சென்னை, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், 63வது எச்.பி.எஸ்.எல் ராயல் ஏரியான் இன்விடேஷன் கோப்பைக்கான போட்டி, கிண்டி மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில், இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்க உள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த போட்டி நடக்கிறது. சென்னையில் இதுவரை நடந்த போட்டிகளில் இல்லாத அளவிற்கு, 4.16 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கிளப் தலைவர் முத்தையா ராமசாமி, எச்.பி.எஸ்.எல்., நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் சுரேஷ்பாலாடுகு ஆகியோர், 29.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெற்றி கோப்பையை நேற்றுமுன்தினம் அறிமுகம் செய்தனர்.

போட்டிகளில், இந்தியாவில் இதுவரை காணாத அதிசய ரக குதிரைகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement