புதிய கலெக்டரால் பொலிவு பெறும் கலெக்டர் அலுவலகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், வளாகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ரோடுகளை சீரமைப்பது, மராமத்து பணிகளில் ஈடுபடுவது என பல்வேறு பணிகள் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சரவணன் உத்தரவில் நடப்பதால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் உள்ளது. 3 மாடி கட்டடங்களை கொண்ட இதில் மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை, நில அளவை பராமரிப்பு துறை, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட 54 வகையான அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. இதன் வளாகத்திற்குள் பத்திரப்பதிவுத்துறை, வனத்துறை, வட்டார போக்குவரத்து துறை எனவும் பல்வேறு அலுவலகங்கள் உள்ள நிலையில் இங்கு தினமும் அலுவலர்கள், மக்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வந்து செல்கின்றனர். 2019ல் முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்ய வரும்போது அப்போது கலெக்டராக இருந்த விஜயலட்சுமி அலுவலக வளாகத்தை சுற்றி ரோடுகள் , மராமத்து பணிகள் செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்தது. அதன்பின் கலெக்டர் விசாகன், பூங்கொடி பொறுப்பிலிருந்த போதும் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் உள்ள ரோடுகள் மக்கள் நடக்க முடியாமல் மேடு, பள்ளமாக மாறியது. அலுவலக கட்டடங்களில் மராமத்து பார்க்காமல் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. பிப்.4ல் திண்டுக்கல் கலெக்டராக பொறுப்பேற்ற சரவணன் கலெக்டர் அலுவலகம் முழுவதும் ஆய்வு செய்து சேதமான பகுதிகளில் மராமத்து , சேதமான ரோடுகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய உத்தரவிட்டார். அதன்படி கலெக்டர் அலுவலகத்தை சுற்றிய ரோடுகள்சீரமைக்கப்பட்டது. அலுவலகம் முழுவதும் பெயிண்ட் அடிக்கும் பணியும் நடந்து வருகிறது .இதன் மூலம் கலெக்டர் அலுவலகம் பொலிவு பெற தொடங்கி உள்ளது. இதைப்பார்க்கும் அலுவலர்கள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
-
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் தர்ணா
-
தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது
-
'தர்க்கம் செய்யாதீர்': விவசாயிகளை கடிந்த கலெக்டர்; மனுவுக்கு 236 நாளாக தீர்வில்லை: விவசாயிகள் அதிருப்தி
-
இருமதி மஞ்சு விரட்டு: 22 பேர் காயம்