'ஜிபே'வில் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிடை நீக்கம்

கடலுார்:கடலுாரில், பிப்., 21ல் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது, கடலுார் கே.என்.பேட்டையில், சிதம்பரம் டிராபிக் போலீஸ் ஏட்டு குகன் பாதுகாப்பு பணியின் போது, பண்ருட்டியில் இருந்து கடலுார் நோக்கி பைக்கில் வந்த தி.மு.க., பிரமுகரை நிறுத்தி சோதனை செய்தார்.

அவர் குடி போதையில் இருந்ததை வழக்கு பதியாமல் இருக்க, 'ஜிபே பார்கோடு ஸ்கேனர்' வாயிலாக ஏட்டு லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, எஸ்.பி., ஜெயக்குமார் நடத்திய விசாரணையில், குடி போதையில் வரும் வாகன ஓட்டிகளிடம் குகன், ஜிபேவில் லஞ்சம் வாங்கியது உறுதியானதை தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement