கம்பியை விட இழுத்திறன் கொண்ட எப்.ஜி.சி.,; வெப்பமான இடங்களிலும் தாங்கும் நுட்பம்

மு ந்தைய நாட்களில் கட்டடங்களின், கான்கிரீட் போன்ற பணிகளுக்கு, 'மைல்டு ஸ்டீல்' உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.
அது எளிதில் துருப்பிடிப்பதாலும், கான்கிரீட்டோடு இணைப்பு குறைவாக இருந்ததாலும், மைல்டு ஸ்டீலுக்கு பதிலாக, 'தார் ஸ்டீல்' பயன்படுத்தப்பட்டது.
பின்னர் அது மேம்படுத்தப்பட்டு, டி.எம்.டி., கம்பிகளாக பயன்பாட்டிற்கு வந்தது. டி.எம்.டி., கம்பிகள் உறுதியானதாகவும், அரிமானத்தை தாங்க கூடியதாகவும், தீயை தாங்குவதாகவும் இருந்தது.
தற்போது, மேலும் புதிய கண்டுபிடிப்பாக கம்பிகளுக்கு மாற்றாக, புதிய தொழில்நுட்பத்தோடு எப்.ஜி.சி., கம்பிகள்(பைபர் கிளாஸ் காம்போசிட்) சந்தைக்கு வந்துள்ளது.
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க(காட்சியா) செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:
இவை எடை குறைவானதாகவும், அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும், அரிமானம் ஏற்படாததாகவும், துருப்பிடிக்காததாகவும் உள்ளது. இக்கம்பிகள் பைபர் கிளாஸ், 60 சதவீதம், ரெசின் எனப்படும் பசைகள், 40 சதவீதம் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன.
இவை கடினமான கம்பிகளாகவும், பட்டைகளாகவும், சதுர, செவ்வக வட்ட பைப்புகளாகவும், சி, எச், டி, சேனல்களாகவும் கிடைக்கின்றன.
கழிவு நீர் பாதை அமைப்பு, நிலத்தடி தொட்டி, நீச்சல் குளம், கடலோரப் பகுதி கட்டடங்கள், கடல் கட்டுமானங்கள் என, பல வேலைகளுக்கு பயன்படுத்தலாம்.
இவை மின்சாரம் கடத்தியாக இல்லாமல் இருப்பதால் அதிக நன்மை. சில இடங்களில் மர வேலைகளுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.
எடை குறைவாக இருப்பதால், கட்டடத்தின் எடை குறைவாகிறது. கம்பியை விட, அதிக இழுவைத்திறன் கொண்டது. பைபர் கிளாஸ் ஆனது, 1,200 டிகிரி வெப்பத்தை தாங்குவதாகவும், ரெசின் 60 டிகிரி வெப்பத்தை, தாங்குவதாகவும் இருக்கிறது.
எனவே, 60 டிகிரியில் இருந்து, 150 டிகிரி வரை வெப்பம் வரக்கூடிய இடங்களில் தாராளமாக உபயோகிக்கலாம். கம்பிகளைப் போன்று வெல்டிங் வைக்க முடியாது; வளைக்க முடியாதது இதன் குறைபாடுகளாக கருதப்படுகிறது. ஆனால், சேனல்களையும், டியூபுகளையும், பட்டைகளையும் நட்டு மற்றும் 'போல்ட்' மூலம் இணைத்து பயன்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
போப் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'