விழிப்புணர்வு ஊர்வலம்

போடி, : போடி அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் கல்லூரியில் துவங்கி தர்மத்துப்பட்டி, மேலச் சொக்கநாதபுரம், ரங்கநாதபுரம், கீழச்சொக்கநாதபுரம் வரை விழிப்புணர்வுக்கான பதாகைகள் ஏந்திய படி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Advertisement