ஊராட்சி ஒன்றிய பள்ளி நுாற்றாண்டு விழா

கூடலுார்: கூடலுார் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி 1907ல் துவக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நகராட்சி தலைவர் பத்மாவதி தலைமையில் நடந்தது.

வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழா துவங்கியது. விழா அறிக்கையை தலைமையாசிரியர் சுருளிராஜ் வாசித்தார். இப்பள்ளியில் படித்து அரசு மற்றும் மருத்துவப் பணியில் உள்ளவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சி நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி, வள மைய மேற்பார்வையாளர் பாரதராணி, கவுன்சிலர்கள் லோகந்துரை, லலிதா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கதிரேசன், டாக்டர் ஓடையன், சித்தா டாக்டர் சிராஜுதீன் மற்றும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

- கீழக் கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா நகராட்சி தலைவர் பத்மாவதி, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் முனுசாமி தலைமையில் நடந்தது.

தலைமை ஆசிரியை அம்பிகா வரவேற்றார். ஆங்கிலேயர் காலத்தில் இப்பள்ளி கட்டுமான பணிக்கு இடத்தினை தானமாக வழங்கிய பேயதேவர் வகையறாக்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. உதவி ஆசிரியர் அழகேசன் நன்றி கூறினார்.

Advertisement