உறவுக்கார வாலிபர் விஷமத்தனம்

வேலுார்: வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அ.தி.மு.க., நிர்வாகி ஒருவருக்கு, 31 வயதில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். அந்த நிர்வாகி, பெற்றோரின்றி தனியாக வசித்த, தன் உறவான 21 வயது வாலிபரை வீட்டிற்கு அழைத்து வந்து பராமரித்தார். நேற்று முன்தினம் இரவு, கே.வி.குப்பத்தில் அ.தி.மு.க, பொதுக்கூட்டத்திற்கு, அந்த நிர்வாகி தன் மனைவியுடன் சென்றுவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பினார்.

அப்போது, அவரது மகள் அழுது கொண்டே, உறவுக்கார வாலிபர், தன்னை பலாத்காரம் செய்ததை சைகையால் தெரிவித்தார். கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அந்த வாலிபரை கைது செய்தனர்.

Advertisement