48 ஆண்டுகளுக்கு பின் அனுமன் திருவீதியுலா

திருப்பூர்; திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில், 48 ஆண்டுகளுக்கு பின், அனுமந்தராய சுவாமி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்திலுள்ள அனுமந்தராய சுவாமி கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
காலையில், மூலவர் அனுமந்தராய சுவாமிக்கு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. புதிதாக கேடயம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, 48 ஆண்டுகளுக்குப்பின் நேற்று, அனுமந்தராய சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
பெருமாள் கோவில் முன் துவங்கி, ஈஸ்வரன் கோவில் வீதி, அரிசிக்கடை வீதி உள்ளிட்ட ரத வீதிகள் வழியாக உற்சவர் திருவீதியுலா வந்துபக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ரத வீதிகளில், திரண்ட பக்தர்கள் அனுமந்தராயரை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement