பைக் - கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, சென்னப்ப நாயக்கனுார் பஸ் ஸ்டாப் அருகே, நேற்று முன்தினம் ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டி-ருந்த பைக்கும், திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டி-ருந்த காரும் நேருக்கு நேர் மோதின.


இந்த விபத்தில், பைக்கில் பயணித்த நடுப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம், 46, அவரது மச்சான் செந்தில், 40, செந்தில் மனைவி சத்யா, 36, ஆகிய மூவரும் துாக்கி வீசப்பட்டு படுகாய-மடைந்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று சிகிச்சை பலனின்றி செந்தில் உயிரிழந்தார். வெங்கடாசலத்துக்கு கால் முறிவு ஏற்-பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, ஊத்தங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement