வழிப்பறி வழக்கு : சிதம்பரத்தில் 3 பேர் கைது

சிதம்பரம்; மொபைல் போன் மற்றும் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் தென்னவன், 38; கடந்த 27 ஆம் தேதி உசுப்பூர் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த குமார் மகன் சீனு(எ) தமிழ்செல்வன், 19; மண் ரோடு சி.கொத்தங்குடியை சேர்ந்த சின்னையன் மகன் கணேஷ்,44; தண்டேஸ்வரநல்லுார் மனோகரன் மகன் வேலுமணி,23; ஆகியோர் தென்னவனை வழிமறித்து, தகராறு செய்துள்ளனர்.

இதில் சீனு(எ) தமிழ் செல்வன், தென்னவனை கத்தியால் காலில் கிழித்தார்.

மேலும் அவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். தென்னவன் புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து சீனு (எ) தமிழ் செல்வன், கணேஷ், வேலுமணி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

Advertisement