வெள்ளக்கேட் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை

கடலுார்; கடலுார் அடுத்த வெள்ளக்கேட் சாந்தசூரி, காளி, பராசக்தி, அங்காளம்மன் கோவிலில் 23ம் ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 26ம் தேதி கொடியேற்றி, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. 27ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு யாகம் வளர்த்து, பால் அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நேற்று 28ம் தேதி காலை 10:00 மணிக்கு

மூலை ஏரிக்கரையில் இருந்து சக்தி கரம் எடுத்து, 12:00 மணியளவில் கோவில் வந்து 1:00 மணியளவில் அம்மனுக்கு குறத்தி அலங்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின், 1:30 மணியளவில் அம்மன் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதில், அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு பம்பை, உடுக்கை கச்சேரி மற்றும் பாவாடராயனுக்கு கும்ப தீபாராதனை நடந்தது.

ஏற்பாடுகளை அங்காளம்மன் சேவா சங்கம் நிறுவனர் பன்னீர்செல்வம் செய்திருந்தார்.

Advertisement