தேசிய அறிவியல் தினம்

அவலுார்பேட்டை : தாழங்குணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் அமலாதாஸ் வரவேற்றார். வி.ஏ.ஓ., காளிதாஸ் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் குறித்து பேசினார்.

வருவாய் ஆய்வாளர் சசிகலா, தமிழ்நாடு வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க வட்ட கிளை சார்பில் மாணவர்களுக்கு மஞ்சள் துணிப்பை, புத்தகங்கள் வழங்கினார்.

விழாவில், ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள் சுகந்தி, ராஜேஸ்வரி, ராம்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement