உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
விருதுநகர்: விருதுநகர் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரியும் தனுஷ்கோடி 33, உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததார். அவரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவர், திருட்டு டூவீலரில் தப்பிச்சென்றாக விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு பிப்.,9ல் தகவல் கிடைத்தது. இதனால் சாத்துார் நான்கு வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் சுற்றி வருவதாகவும், அவர்களிடம் கைத்துப்பாக்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களில் ஒருவரை ஆர்.ஆர்.நகர் அருகே வைத்து வச்சக்காரப்பட்டி போலீசார் பிடித்தனர். மற்றொருவர் தப்பினார்
அவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரியும் கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி 33, என்பதும் உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததும், அதில் 5 தோட்டாக்கள் இருப்பதும், அவர் மீது ஏற்கனவே வத்திராயிருப்பு ஸ்டேஷனில் மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது.
தனுஷ்கோடியை வச்சக்காரப்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 15 நாள் ரிமான்ட் செய்யப்பட்டார். எஸ்.பி., கண்ணன், தனுஷ்கோடியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
போலீசாரிடம் இருந்து தப்பிச்சென்ற திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த சுரேஷ், ஆர்.ஆர்., நகர் அருகே எத்திலப்பன்பட்டியில் இருந்து டூவீலரை திருடி தனது காதலியுடன் பழநிக்கு சென்றார். அவரின் அலைபேசி இருப்பிடத்தை ஆராய்ந்து போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து டூவீலரை பறிமுதல் செய்து 35 பவுன் நகை குறித்து விசாரித்து வந்த நிலையில், ரிமான்ட் முடிந்த தனுஷ்கோடியை மூன்று நாள் காவலில் எடுத்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
-
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.63,520!
-
திருநெல்வேலியில் கொட்டியது கனமழை; மழை அளவு விபரம் இதோ!
-
இமாச்சலில் தொடரும் இடைவிடாத பனிப்பொழிவு! தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு