மாணவியை ஆபாச படம் எடுத்தவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் குடைபாறைப்பட்டி அந்தோணியார் தெருவை சேர்ந்த 20 வயது கல்லுாரி மாணவி.இவரது வீட்டில் மெக்கானிக் முகமது யூசுப் 21, குடும்பத்தோடு வாடகைக்கு இருக்கிறார். மாணவி வீட்டு குளியலறையில் குளித்தபோது முகமது யூசுப் அலைபேசியில் வீடியோ எடுத்தார்.

இதை பார்த்த மாணவி பெற்றோர்களிடம் தெரிவிக்க தாலுகா போலீசில் புகார் அளித்தனர். எஸ்.ஐ.,கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் முகமது யூசுப்பை கைது செய்தனர்.

Advertisement