அடிவயிற்று ரத்தக்குழாய் வீக்கத்திலிருந்து முதியவர் மீட்பு; மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை
மதுரை : ராமநாதபுரத்தைச் சேர்ந்த 70 வயது முதியவரின் அடிவயிற்று ரத்தக்குழாய் வீக்கமாக இருந்த நிலையில் அவருக்கு உள்நாள அறுவை சிகிச்சை செய்து மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் சாதித்துள்ளனர்.
கார்டியாக் சயின்சஸ் துறைத் தலைவர் டாக்டர் சிவக்குமார், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபு குமரப்பன் ஒருங்கிணைந்து அறுவை சிகிச்சை செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: கடுமையான அடிவயிற்று வலியோடு முதியவர் வந்தார். எந்த நேரத்திலும் வெடித்து உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தமனி அழற்சி, அடிவயிற்றில் இவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. அடிவயிற்றின் பிரதான ரத்தநாளத்தில் ஆபத்தான இந்த வீக்கமும், விரிவாக்கமும் ஆபத்தாக இருந்தது. திறந்தநிலை அறுவைசிகிச்சையுடன் பெரிய கீறல்கள் இடுவது மற்றும் பொது மயக்க மருந்து வழங்குவது போன்ற நடைமுறைகளை தவிர்த்து நவீன கேத் லேப்பில் சருமத்தின் வழியாக இ.வி.ஏ.ஆர்., எனப்படும் சிறிய துளையிட்டு மருத்துவ செயல்முறை மூலம் உள்நாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. துளைக்கு தையலிடும் அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை முடிந்த 3 நாட்களுக்குள் முதியவர் வீடு திரும்புவார் என்றனர்.
கார்டியாக் சயின்சஸ் துறை முதுநிலை நிபுணர்கள் கணேசன், சம்பத்குமார், டாக்டர்கள் செல்வமணி, ஜெயபாண்டியன், தாமஸ் சேவியர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி