பறவைகள் கணக்கெடுப்பில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு

தேனி : மார்ச் 8, 9ல் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிலும், மார்ச்.15, 16ல் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் பங்கேற்க உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்யலாம்.'என, மாவட்ட வனத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 8, 9 (சனி, ஞாயிறு) நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும், மார்ச் 15, 16ல் (சனி, ஞாயிறு) நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளும் நடக்க உள்ளன.தேனி மாவட்ட வன கோட்டம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 25 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 25 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. பணி காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடத்தப்பட உள்ளது. விருப்பமும், ஆர்வமும் உள்ள தன்னார்வலர்கள் இப்பணியில் கலந்து கொள்ளலாம்.

விரும்புவோர் முதல்வரின் பசுமை தோழர் பிரியங்காவை 97515 49317 என்ற அலைபேசியிலும், உயிரியலாளர் சூரஜ்குமாரை 63834 89107 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

பங்கேற்கும் அனைவருக்கும் வனத்துறை சார்பில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என வனத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement