அரசு பள்ளியில் முப்பெரும் விழா

வில்லியனுார் : சேதராபட்டு அரசு தொடக்க பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கல், முன் மழலை மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் காட்சிப்படுத்துதல் மற்றும் மாணவர்களின் கைவினை பொருள் கண்காட்சி என நடந்த முப்பெரும் விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஹேமமாலினி தலைமை தாங்கினார்.

ஆசிரியை தென்றல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் பங்கேற்று, மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கி வாழ்த்தினார்.

கைவினை கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் அமுதா, பிரதீபாதேவி, பவித்ரா, சங்கரி, சரிதா, கவுசல்யா, ஆறுமுகம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

Advertisement