எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெரு ஊருணியில் கழிவுநீர் தேக்கம்; ரூ. 48.30 லட்சம் வீண்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் வைகை ஆற்றை மையமாக வைத்து உருவாகிய பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தில் கிறிஸ்தவ தெரு ஊருணி, ஜீவா நகர், மலையான் குடியிருப்பு, உய்ய வந்த அம்மன் உள்ளிட்ட பல ஊருணிகள் உள்ளது.

இவற்றை நகராட்சி சார்பில் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. கிறிஸ்தவ தெருவில் இருந்த ஊருணி பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி இருந்தது.

இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.48.30 லட்சத்தில் நகராட்சியால் சீரமைக்கம் பணிகள் துவங்கி நிறைவடைந்தது.

மேலும் மக்கள் ஊருணியில் இறங்கி குளிக்கும் வகையில் படித்துறைகள், கம்பி வேலி அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே ஊருணி பயன்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஓராண்டாக கழிவு நீர், குப்பை தேங்கி பயன்பாடின்றி உள்ளது.

ஊருணியை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement