பப்பியுடன் ஒய்யாரமாய் ஒரு 'கேட்வாக்'

கோவை, ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில், செல்லப்பிராணிகளுக்கான பேஷன் ஷோ, வரும் 8,9 ம் தேதிகளில் நடக்கிறது.

மிட் டவுன் கார்னிவல் நிறுவனம் சார்பில், பெண்கள் தினத்தை ஒட்டி, மார்ச் 8, 9ம் தேதிகளில், பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில், மதியம் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடத்துகிறது. இதில், ஹைலைட்டாக, பெட் பேஷன் ஷோவும் இடம் பெற்றுள்ளது.

செல்லப்பிராணியுடன் ஒரே கலரில், மேட்சிங் டிரஸ் அணிந்து கொண்டு, ஒய்யாரமாய் ஒரு கேட்வாக் செல்லலாம். உங்கள் செல்லத்தின் பெயர், அதன் தனித்திறமை, அதனுடன் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பிறருடன் பகிரலாம். இதற்கு நுழைவுக்கட்டணம் இல்லை. நடுவர் குழுவின் மனதை கொள்ளையடிக்கும் செல்லத்துக்கு, கிப்ட் உறுதி.

கூடுதல் தகவலுக்கு: midtownfleamarket@gmail.com

Advertisement