கரையுமே நம் மனம்

கரை ஓரங்களில் மண்ணிற்குள் இருந்து கிளர்ந்து வெளியே தெரியும் சல்லி வேர்களை தீண்டியபடியே, நெளிந்து அசைந்தாடும் ஓடை நீரை, உள்ளங்கையில் அள்ளத் துணியும் மறுநொடியில், கூட்டமாய் வரும் ஆரஞ்சு நிற கொய் மீன்களை ரசித்தபடி, படகு சவாரி செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில், பொட்டாஸ் பார்மை உருவாக்கியுள்ளேன் , என்கிறார்,இதன் உரிமையாளர் ஜோன் பொட்டாஸ்.
அவர் பகிர்ந்தவை:
கேரளாவில் தனுஷ்கோடி - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, ஆலுவா - மூணாறு ரோட்டில் 5.5 ஏக்கர் பரப்பில் பார்ம் அமைத்துள்ளேன். பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட, அட்வென்சர் பார்க்காக இதை செயல்படுத்தி வருகிறேன். இதன் ஒருபகுதியில், கிட்டத்தட்ட ஒரு ஏக்கரில், படகுசவாரிக்கு குட்டை வெட்டியிருக்கிறோம். இக்குட்டை அமைத்தபோது, கிட்டத்தட்ட 500 கொய் இன மீன்களை, தண்ணீரில் விட்டோம். இம்மீன்களை எடுத்து விற்பதில்லை. இவை, இக்குட்டையிலே இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன. தற்போது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் உள்ளன.
ஆரஞ்சு நிறத்தில், ஆங்காங்கே கருப்பு, பழுப்பு திட்டுகளுடன், வாயை திறந்தபடி கண்களை சிமிட்டிக்கொண்டே, நீந்தும் கொய் இன மீன்கள், செல்லப்பிராணியாக வளர்க்க ஏற்றவை. இது, நம் கையில் உணவு வைத்தால், கூட்டமாக வந்து சாப்பிட்டு செல்லும். செதில்களோடு, வழுவழுப்பாக மின்னும் மேனி கொண்டு உரசும் போது, நமக்கு ஏற்படும் அனுபவம் அலாதியானது.
படகு சவாரி செய்து கொண்டே குட்டை முழுக்க நிரம்பி கிடக்கும், கொய் இன மீன்களை நோக்கி கை விரித்தால், அவை தேடி வந்து உரசி, முத்தமிட்டு செல்லும். குட்டையை சுற்றிலும், அடர்ந்த மரங்கள் நிறைந்த காடு இருப்பதால், சுத்தமான சில்லென்ற காற்றில், பறவைகளின் சத்தத்தில், மனதுக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடியே, படகில் சவாரி செய்யலாம். இந்த அனுபவத்தை, மனம் நிறைய சுமந்து செல்ல, ஒருமுறை இங்கு விசிட் அடியுங்கள், என்றார்.
மேலும்
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்