கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை : திருவாடானை தாலுகா ஆழிகுடி குரூப் கிராம உதவியாளர் சுதாகர் 47. இவர் சில நாட்களுக்கு முன்பு தொண்டி அருகே வீரசங்கிலிமடம் அருகில் டூவீரில் சென்ற போது சின்னதொண்டியை சேர்ந்த நல்லசிவம், முத்து, பொன்னையா, மாரியப்பன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
சுதாகரை தாக்கிய நான்கு பேரையும் கைது செய்ய வலியுறுத்தி திருவாடானை, ஆர் எஸ் மங்கலம் தாலுகாவை சேர்ந்த கிராம உதவியாளர்கள் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். 80க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
Advertisement
Advertisement