இரு இடங்களில் பஸ்கள் கவிழ்ந்து 10 பேர் காயம்

நரிக்குடி : மதுரையில் இருந்து நரிக்குடி வீரசோழனுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை மானாசாலை அருகே சம்பக்குளம் பிரிவு ரோட்டில் டூ வீலர் குறுக்கே வந்ததால் விலகிச் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி வயலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் பயணம் செய்த 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நேற்று காலை பந்தல்குடி கலை ,அறிவியல் தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றபோது மல்லாங்கிணர் முடியனூர் விலக்கு அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 7 மாணவர்கள் காயமடைந்தனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement