பள்ளி, கல்லுாரிகளில் நடந்த தேசிய அறிவியல் தின விழா

கீழக்கரை : கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக பேராசிரியர் ஆனந்த் பங்கேற்றார்.

விழாவில் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தல், அறிவியல் தொடர்பான ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கணிதவியல் துறை தலைவர் ஜேசுதுரை, பேராசிரியர்கள் காதர் கனி, லோகேஸ்வரி, செல்வ லட்சுமி செய்திருந்தனர்.

* பரமக்குடி அருகே சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய விழாவிற்கு தாசில்தார் சேகர் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார். போகலுார் வட்டார அறிவியல் இயக்க தலைவர் மலைச்சாமி முன்னிலை வகித்தார். செயலாளர் குமரேசன் வரவேற்றார்.

மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர் ராமர், வட்டார வளமைய பயிற்றுனர் திலகராஜ், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி, துணை தலைவர் நவநீதகிருஷ்ணன் வாழ்த்தினர்.

மாணவர்களை ஊக்குவித்த அறிவியல் ஆசிரியர் வேலம்மாளுக்கு பரிசளிக்கப்பட்டது. அறிவியல் இயக்க வட்டாரப் பொருளாளர் ரூபன் நன்றி கூறினார்.

Advertisement