பண்ணவயல் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி தேவை

திருவாடானை : திருவாடானை அருகே பண்ணவயலில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தென்பகுதியில் வகுப்பறை கட்டடம் சேதமடைந்ததால் ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது.


அப்போது அருகிலிருந்த சுற்றுச்சுவரும் சேர்த்து இடிக்கப்பட்டது. தற்போது திறந்த வெளியாக இருப்பதால் கால்நடைகள் புகுந்து அசுத்தம் செய்கின்றன. இது குறித்து பள்ளி மேலாண்மைக் குழுவினர் கூறுகையில், சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளிக்கு முன்புள்ள செடிகளை ஆடுகள் மேய்ந்து விடுகிறது. மாணவர்களின் பைகளை கடிக்கின்றன. எனவே சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement