கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10ஆண்டு சிறை

தேனி : தேனி அருகே இளைஞரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட அல்லிநகரம் கம்பம் தெரு வாலிபர் தீபக்கிற்கு 21, பத்தாண்டுகள் சிறை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி அல்லிநகரம் இளங்கோ தெரு லதா 42. இவரது மகன்கள் ரஞ்சித்குமார், தினேஷ்குமார். 2024 மே 29ல் இரவில் வீட்டிற்கு அருகில் சமுதாய கூட்டம் நடக்க இருந்தது. அதற்கு தாய் லதா, மகன்கள் இணைந்துசென்றனர்.

அதேப்பகுதியை சேர்ந்த அர்ஜூனனின் மகன்கள் தீபக், வினோத்குமார், உறவினர்கள் தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய நால்வர் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது தீபக், வினோத்குமார் ஆகிய இருவர் தினேஷ்குமாரிடம், எதற்கு எங்களை பார்த்து சிரிக்கிறாய்,'என கேட்டனர்.இதில் தகராறு ஏற்பட்டு வினோத்குமார், தெய்வேந்திரன், பரமசிவம் இணைந்து ரஞ்சித்குமார், தினேஷ்குமாரை தாக்கினர்.

தினேஷ்குமாரை, தீபக் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார். தினேஷ்குமார் தேனிமருத்துவக்கல்லுாரி சிகிச்சை பெற்று திரும்பினார்.

அல்லிநகரம் போலீசார் தீபக், வினோத்குமார், தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய நால்வரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசு வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜரானார். குற்றவாளி தீபக்கிற்கு பத்தாண்டுகள் சிறை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் வினோத்குமார், தெய்வேந்திரன், பரமசிவம் உட்பட மூவர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement