சிவகாசியில் திருடு போன 11 டூவீலர்கள் மீட்பு

சிவகாசி: சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருடு போன 11 டூ வீலர்களை மீட்ட போலீசார் டூவீலர் மெக்கானிக மணிகண்டனை 28, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி பைபாஸ் ரோட்டில் தனியார் நிறுவன அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர் ஒரு மாதத்திற்கு முன்பு திருடு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் மூன்று மாதமாக 11 டூவீலர்கள் திருடு போனதையடுத்து எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ., செல்வராஜ், போலீசார் விசாரித்து வந்தனர்.

அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது சிவகாசி மீனாட்சி காலனியைச் சேர்ந்த மணிகண்டன் டூவீலரை திருடியது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் சந்திரன், எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ செல்வராஜ், எஸ்.எஸ்.ஐ செல்வராஜ் ஆகியோரை எஸ்.பி., கண்ணன் பாராட்டினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: சிவகாசி மீனாட்சி காலனியைச் சேர்ந்த மணிகண்டன் 3 மாதங்களாக சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் வீடு, கடைகள் முன் நிறுத்தப்பட்டிருந்த 11 டூவீலர்களை திருடி உள்ளார்.

திருடிய வாகனங்களை குறைந்த விலைக்கு ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், சிவகாசி பகுதியில் வெவ்வேறு நபர்களிடம் விற்பனை செய்துள்ளார்.

மணிகண்டன் விற்பனை செய்த நபர்களிடமிருந்து டூவீலர்கள் மீட்கப்பட்டு உள்ளது, என்றனர்.

Advertisement