அழகப்பா பல்கலையில் பார்வையாளர் தினம்

காரைக்குடி, : காரைக்குடி அழகப்பா பல்கலை அறிவியல் வளாகத்தில் நடந்த பார்வையாளர் தின நிகழ்ச்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலை அறிவியல் புலத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினம் பார்வையாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. பல்கலை அறிவியல் புல முதன்மை ஜெயகாந்தன் வரவேற்றார்.

அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி தலைமையேற்றார். அழகப்பா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பழனிச்சாமி, சேகர் வாழ்த்தினார். பதிவாளர் செந்தில் ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள், அறிவியல் சோதனைக் கூடத்தில் அதிநவீன உபகரணங்களின் கண்காட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அறிவியல் துறை மட்டுமின்றி நுண்கலைத் துறை, திறன் மேம்பாட்டு மையம் சிறப்பு கல்வி மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறையினரும் ஆராய்ச்சிகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் வில்சன் நன்றி கூறினார்.

Advertisement