நபார்டு வங்கி மூலம் ரூ.15,549 கோடி வேளாண், தொழில் கடன் இலக்கு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி, கல்வி, வீடு கட்ட நபார்டு வங்கி மூலம் ரூ.15,549.44 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

நம் நாட்டில் வேளாண் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சி, ஏழை, நடுத்தர குடும்பத்தினர் வீடு கட்ட குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டத்தில் பயனாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு நபார்டு வங்கி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்து கடன் வழங்க நிதியை விடுவிக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சி பெற வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த உற்பத்தியை அதிகரிக்க செய்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற செய்ய வேண்டும் என்பது நோக்கமாகும்.

2025- - 2026 ம் ஆண்டில் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய வங்கிகள் மூலம் வேளாண்மை துறை சார்ந்த பணிகளுக்கு ரூ.10,815.57 கோடி, நுண், சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் திட்டங்களுக்கு ரூ.2,019.14 கோடி, தொழில் வளர்ச்சியை மாவட்டத்தில் அதிகரிக்க செய்ய ஏற்றுமதி தொழில், கல்வி கடன், வீடு கட்டுதல் போன்ற முன்னுரிமை சார்ந்த துறைகளுக்கு ரூ.2,714.73 கோடி கடன் வழங்க நபார்டு வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 2025-- 2026ம் ஆண்டுக்காக ரூ.15,549.44 கோடி வரை கடன் வழங்க நபார்டு வங்கி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Advertisement