தி.மு.க.,விற்கு எதிராக 70 சதவீத வாக்காளர்கள்: அமைப்பு செயலாளர் பேச்சு
சிவகங்கை: தமிழகத்தில் தி.மு.க., விற்கு எதிராக உள்ள 70 சதவீத வாக்காளர்களை கைப்பற்றி, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.,வினர் பாடுபட வேண்டும் என சிவகங்கையில் அமைப்பு செயலாளர் ஏ.கே., சீனிவாசன் பேசினார்.
சிவகங்கையில் அ.தி.மு.க., சார்பில் பூத் கிளை மற்றும் விளையாட்டு வீரர் அணி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
அமைப்பு செயலாளர் ஏ.கே.,சீனிவாசன் பேசியதாவது:
தி.மு.க.,விற்கு ஆதரவாக 30 சதவீத வாக்காளர்கள் தான் ஓட்டளிக்கின்றனர். ஆனால், 70 சதவீத வாக்காளர்கள் தி.மு.க.,விற்கு எதிராக உள்ளனர்.
அந்த வாக்காளர்களை நம் பக்கம் இழுத்து, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெற்று ஆட்சி அமைக்க பூத் கமிட்டி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.
அதே போன்று வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற வேலைகளை கட்சி பொது செயலாளர் பழனிச்சாமி கவனித்து வருகிறார். தி.மு.க.,வினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிகளவில் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர்.
இது போன்று தென் மாவட்டத்தில் போலி வாக்காளர்கள் சேர்த்தது குறித்து அ.தி.மு.க., அளித்த புகாரில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே தி.மு.க.,வினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளார்களா என்பதை கட்சியினர் கவனித்து, அவற்றை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதிதாக விளையாட்டு வீரர் அணியில் இளைஞர்களை அதிகம் சேர்க்க வேண்டும்.
விளையாட்டு வீரர் அணிகள் மூலம் அ.தி.மு.க., சார்பில் கிராமப்பற விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.
மேலும்
-
திருநெல்வேலியில் கொட்டியது கனமழை; மழை அளவு விபரம் இதோ!
-
இமாச்சாலில் தொடரும் இடைவிடாத பனிப்பொழிவு! தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்