மாநில தடகளம் தேவகோட்டை முதலிடம்

தேவகோட்டை : தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு சார்பாக மாநில அளவில் 6வது 23 வயதுக்குட்பட்ட இளையோர் தடகளப் போட்டி சென்னையில் நடந்தது.

இதில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி மாணவர் ஸ்ரீநிரஞ்சன் தடை தாண்டும் போட்டியில் முதலிடம், யோகேஸ்வரன் 20 வயதுக்குட்பட்டோர் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் சுகுமார் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்றனர்.

மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் லூர்துராஜ் ஆகியோரை கல்லுாரி நிர்வாகத்தினர், முதல்வர் நாவுக்கரசு, பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

Advertisement