துாய்மை பணியாளர் விழிப்புணர்வு முகாம்

திருப்பூர்; துாய்மைப்பணியாளர் நல வாரியம் மற்றும் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு கவுன்சில் ஆகியன இணைந்து, துாய்மைப்பணியாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமை, 'பராமரிப்பாளர் மேம்பாடு திட்டம்' என்ற தலைப்பில், நேற்று திருப்பூர், தெற்கு ரோட்டரி மஹாலில் நடத்தின.

தேசிய துாய்மைப் பணியாளர் நல வாரியம் பரிந்துரைக்கும் துாய்மைப் பணியாளர் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணம் அடங்கிய பெட்டகம் மற்றும் துாய்மைப் பணியாளர் வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது.

மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், துாய்மை பணியாளர் நல வாரிய துணை தலைவர் கனிமொழி பத்மநாபன், துணை மேயர் பாலசுப்ரமணியம், தாட்கோ மேலாளர் ரஞ்சித்குமார், நகர்நல அலுவலர்முருகானந்த் உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement