என்.எஸ்.எஸ்., சாகசப் பயிற்சி; சிக்கண்ணா மாணவர் தேர்வு

திருப்பூர்; மாநில என்.எஸ்.எஸ்., சார்பில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மாநில அளவிலான சாகச பயிற்சி முகாம், இன்று, (1ம் தேதி) துவங்கி வரும், 5ம் தேதி வரை நடக்கிறது.

மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலைகளில் இருந்து, 120 பேர் பங்கேற்கின்றனர். முகாமில் மலையேற்றம், மலைகளில் நடைபயிற்சி, கூடாரம் அமைத்தல் உள்ளிட்ட பலவித பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க. பாரதியார் பல்கலையில் இருந்து, 9 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்டத்தை சேர்ந்த விலங்கியல் துறை மாணவர் நவீன்குமாரும் ஒருவர்.

தேர்வான மாணவரை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., திட்ட மாணவ, மாணவியர் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.

Advertisement