நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இச்சங்கம் சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது. இதை முறைப்படுத்தி, கண்காணிக்கும் அதிகாரம் வணிக குழுவுக்கு மட்டுமே உள்ளது.

பிற துறை அதிகாரிகள் இதில் தலையிடக்கூடாது. அடையாள அட்டை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் இதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் முன் வைக்கப்பட்டன.திருப்பூர் குமரன் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.

சங்க நிர்வாகிகள் சேகர், நடராஜன், ரவி, மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில் பங்கேற்ற வியாபாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement