கலைத்திருவிழாவில் முதலிடம்; அரசு பள்ளி மாணவியர் அபாரம்

அனுப்பர்பாளையம்; சிறுபூலுவபட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படித்து வரும், 10 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் அரசு சார்பில், நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றனர்.

இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில், எம்.எல்.ஏ., விஜயகுமார், கலந்து கொண்டு மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கவுன்சிலர் தங்கராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தசாமி, கவுரவ தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement