ரத்தாகும் நிலையில் இலவச மனை பட்டா

திருப்பூர்; காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களில், 13 பேரை கண்டறிய முடியாததால், பட்டா ரத்து செய்யும் நிலையில் உள்ளது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:

பரஞ்சேர்வழி கிராமம் புல எண்: 567/2 ல், 1.82 எக்டர் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலம் எடுப்பு செய்யப்பட்டு, 137 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருந்தது. இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை, தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பட்டா பெற்ற பயனாளிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக்கொள்ள வேண்டும். இந்நிலையில், பரஞ்சேர்வழியில் பட்டா பெற்றவர்களில் 13 பேரை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்நபர்கள், பட்டா வழங்கப்பட்ட இடத்தில் வசிக்கவும் இல்லை.

இதுகுறித்து அறிவிப்பு அளித்தும், இதுவரை எந்த விண்ணப்பமும் அளிக்கவில்லை. அதனால், பட்டாவிலுள்ள நிபந்தனைப்படி, பட்டாக்களை ஏன் ரத்து செய்யக்கூடாது என்கிற விளக்கத்தை, சம்பந்தப்பட்ட நபர்கள், 15 நாட்களுக்குள் கலெக்டருக்கோ அல்லது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கோ அனுப்பிவைக்க வேண்டும். தவறி னால் பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்படும்.

Advertisement