பள்ளியில் பட்டமளிப்பு விழா

பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யூ.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளி முதல்வர் எட்வின்நேசஸ் தலைமை வகித்தார். துணை முதல்வர் வீரன், பொருளாளர் இக்னாஷியல் ஐசக் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி இயற்பியல் துணை தலைவர் திருமலைசாமி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள், அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement