புகார் பெட்டி...

விவசாயிகள் பாதிப்பு

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் இரவில் மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி செல்வதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.

முனுசாமி, மாவிடந்தல்.

பயணிகளுக்கு இடையூறு

விருத்தாசலம் பஸ் நிலையத்திற்குள் கார், வேன் போன்ற வாகனங்கள் உள்ளே சென்று வருவதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது.

சங்கர், விருத்தாசலம்

போக்குவரத்து இடையூறு

வடலுார் - கும்பகோணம் சாலையில், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

ஆனந்த், வடலுார்.

ரயில் பயணிகள் அவதி

கடலுார் - முதுநகர் சந்திப்பு ரயில்நிலையத்தில், பயணிகள் கழிவறை பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சேகர், கடலுார்.

வேகத்தடை அமைக்கப்படுமா

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக வாசலில் பயனாளிகள், பாதசாரிகள் நலன் கருதி வேகத்தடை அல்லது பேரிகார்டுகள் அமைக்க வேண்டும்.

ராஜ்குமார், விருத்தாசலம்.

Advertisement