ஊஞ்சல் உற்சவம்

சிதம்பரம்; குமராட்சி மகா காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள குமராட்சியில் அமைந்துள்ளது, மகா காளியம்மன் கோவில், நேற்று முன்தினம் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மகா காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாரதனை நடந்தது.

தொடர்ந்து இரவு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு, தொடர்ந்து பம்பை இசை முழங்க, தாலாட்டு பாடப்பட்டு, அம்மனுக்கு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர், மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement