கூலி படை மூலம் கொலை செய்ய முயற்சிப்பதாக வாலிபர் புகார் மனு

கடலுார்; அரசியல் கட்சி பிரமுகர் கொலை செய்ய கூலி படையை அனுப்புவதாக, கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் புகார் மனு கொடுத்தார்.

விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியாங்குப்பத்தை சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார், 28; என்பவர் தனது உறவினர்களுடன் கொடுத்துள்ள மனு;

நான் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருகின்றேன். அவர், சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி விற்பனை செய்வதை அரசு அதிகாரிகளுக்கு நான் தெரிவித்துவிட்டேன் என தவறாக நினைத்து 21ம் தேதி என்னை கொலை செய்ய கூலி படையை அனுப்பினார். இது குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே, அரசியல் கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement