ரூ.342 கோடியில் 1,15,148 டன் நெல் மார்க்கெட் கமிட்டி மூலம் விற்பனை
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் 2024 ஏப்., முதல் 2025 பிப்., 26ம் தேதி வரை 342 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,15,148 மெட்ரிக் டன் நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் கூறியதாவது;
கடலுார் மாவட்டத்தில் தற்போது யூரியா 7,746 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 1,831 மெட்ரிக் டன், பொட்டாஷ் 3,146 மெட்ரிக் டன், காம்ப்லக்ஸ் உரம் 5,766 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,110 மெட்ரிக் டன் என மொத்தம் 19,599 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. மேலும், மாவட்டத்தில் எண்ணெய் வித்து 41,421 மெட்ரிக் டன், பருப்பு வகை 22,855 மெட்ரிக் டன், நெற்பயிர் 2,97,359 மெட்ரிக் டன்,
சிறுதானியங்கள் 10,047 மெட்ரிக் டன் எள் 2,008 மெட்ரிக் டன் இருப்பு
உள்ளது. கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 105 மனுக்கள் பெறப்பட்டது. அதில், 92 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்து. மேலும், 13 மனுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1.4.2024 முதல் 26.2.2025 வரை 342 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,15,148 மெட்ரிக் டன் நெல் மார்க்கெட் கமிட்டி மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை