அரசு பள்ளி ஆண்டு விழா

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகமசுந்தர் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் செல்வம் வரவேற்றார்.

இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள் மணி, பாலசுப்பிரமணியம், லட்சுமி, அம்பிகாபதி, பூங்குழலி, ஏஞ்சல், ஜெயப்பிரியா உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

Advertisement