பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
கடலுார்; சுற்றுச்சூழலில் முழுமையாக ஈடுபடுபவர்களுக்கு அரசு சாம்பியன் விருது, பணமுடிப்பு வழங்குகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் வழங்க உள்ளது.
அதற்கு, சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், அது தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல், காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர் உள்ளாட்சி அமைப்பு தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மாநிலம் முழுவதிலும் 100 தனி நபர்கள் நிறுவனங்களை தேர்வு செய்ய உள்ளது. இதில் கடலுார் மாவட்டத்தில் 3 விருதுகள் தேர்வு செய்யப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவம் மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (WWW.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை