மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கூட்டம்; அ.தி.மு.க., - த.வா.க.,வினர் வெளிநடப்பு

நெல்லிக்குப்பம்; பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அ.தி.மு.க., மற்றும் த.வா.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம் சேர்மன் ஜெயமூர்த்தி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் சண்முகசுந்தரி, துணைத்தலைவர் சாதிகா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அர்ஜூனன் (அ.தி.மு.க.,): தொழில்புரிவோருக்கான உரிம கட்டண உயர்வை ஏற்க முடியாது.குடிநீர் குழாயை சாலை மட்டத்திலேயே போடுவது கண்டிக்கதக்கது.
முத்துகிருஷ்ணன்(த.வா.க.,): பேரூராட்சியின் வரவு செலவு கணக்கை கொடுக்கவில்லை.
செயல் அலுவலர்: அதுபோல் கொடுத்தால் அதை சமூக வலைதளங்களில் போடுகிறீர்கள் என்பதால் கொடுக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகத்தின் தவறான செயல்களை கண்டிப்பதாக கூறி அர்ஜூனன், முத்துகிருஷ்ணன் வெளிநடப்பு செய்தனர்.
தலைவர்: அவர்கள் கூறிய இடத்தில் இடமில்லாததால் குடிநீர் குழாயை அதுபோல் போட்டோம்.இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்காது.முன்னாள் சேர்மனே ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்ற மறுக்கிறார்.
மஞ்சுளா(சுயே.,): தமிழக முதல்வர் பண்ருட்டி தொகுதியில் அமைப்பதாக கூறிய கலை கல்லூரியை மேல்பட்டாம்பாக்கத்தில் அமைக்க வேண்டும்.
தலைவர்: பெருமாள், சிவன் கோவில்களுக்கு சொந்தமான இடம் உள்ளது.எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்கள் ஒத்துழைப்புடன் அங்கு கல்லுாரி அமைக்க முயற்சி செய்யப்படும்.
மேலும்
-
திருநெல்வேலியில் கொட்டியது கனமழை; மழை அளவு விபரம் இதோ!
-
இமாச்சாலில் தொடரும் இடைவிடாத பனிப்பொழிவு! தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்