பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு

புவனகிரி; புவனகிரியில் பாதுகாப்பற்ற நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புவனகிரி அடுத்த சித்தேரியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பு இல்லாமல் வெட்ட வெளியில் அடுக்கிவைத்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முறையாக தார்ப்பாய் மூலம் மூடி வைக்காமல், கிழிந்த நிலையில் பெயரளவில் மூடி வைத்துள்ளனர்.

தற்போது மழை பெய்ய வாப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், மழை வந்தால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலைக்கு தள்ளப்படும்.எனவே இப்பகுதியில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement