பிளஸ் 2 பொதுத்தேர்வில் 30,159 மாணவர்கள் பிளஸ் 1ல் 30,499 பேர் தேர்வில் பங்கேற்பு
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 30,159 மாணவர்களும், பிளஸ் 1 பொதுத்தேர்வை 30,499 மாணவர்களும் எழுதுகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் 3ம் தேதி துவங்கி 25ம் வரை நடக்கிறது. இத்தேர்வை 246 பள்ளிகளை சேர்ந்த 14,949 மாணவர்கள், 15,210 மாணவிகள் என மொத்தம் 30,159 பேர் எழுதுகின்றனர்.
கடலுார் கல்வி மாவட்டத்தில் 67, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 55 என 122 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்களை கொண்டு செல்ல கடலுார் 14, விருத்தாசலம் 14 என 28 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 122, கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் 6,
துறை அலுவலர்கள் 122, கூடுதல் துறை அலுவலர் 6, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 10, வழித்தட அலுவலர்கள் 28 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அறைக்கண்காணிப்பாளர்களாக 1567 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பறக்கும்படை உறுப்பினர் மற்றும் நிலைப் படை உறுப்பினர்களாக 200 ஆசிரியர்கள்
கல்வித்துறை அலுவலர்கள் தலைமையில் பணிமேற்கொள்கின்றனர். இதேபோன்று, பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் வரும் 5ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 248 பள்ளிகளை சேர்ந்த 15,307 மாணவர்கள்,
15,191 மாணவிகள் என பொத்தம் 30,499 பேர் எழுதுகின்றனர். அறைக் கண்காணிப்பாளர்களாக 1586 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பறக்கும்படை உறுப்பினர் மற்றும் நிலைப் படை உறுப்பினர்கள் 200 ஆசிரியர்கள் கல்வித்துறை அலுவலர்கள் தலைமையில் பணிமேற்கொள்கின்றனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களிலேயே நடைபெறுகிறது.
மேலும்
-
திருநெல்வேலியில் கொட்டியது கனமழை; மழை அளவு விபரம் இதோ!
-
இமாச்சாலில் தொடரும் இடைவிடாத பனிப்பொழிவு! தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்