பஞ்சாபில் ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருட்களுடன் பயணி கைது

1

அமிர்தசரஸ்: பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் பயணி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.


இந்நிலையில்,கடந்த பிப்., 26 அன்று மலேசியாவில் இருந்து அமிர்தசரஸ் வந்த விமானத்தில் பயணித்த மன்தீப் சிங் கொண்டுவந்த உடமைகள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மன்தீப் சிங், 8.17 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருள்களையும் மறைத்து கொண்டு வந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8.17 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.மன்தீப் சிங் மீது போதைப்பொருள் சட்டம் 1985 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமிர்தசரசில், சில நாட்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணித்தவரிடம் 400 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலி மற்றும் வளையல் என 400 கிராம் மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.35.60 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

ஒரே வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement