மும்பை-மோகன் பகான் 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில் 'விறுவிறு'

மும்பை: மும்பை, மோகன் பகான் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, மோகன் பகான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. மோகன் பகான் அணிக்கு ஜேமி மெக்லாரன் (32வது நிமிடம்), டிமிட்ரி பெட்ராடஸ் (41வது) கைகொடுத்தனர். மும்பை அணி சார்பில் ஜான் டோரல் (57வது நிமிடம்), நாதன் ரோட்ரிக்ஸ் (89வது) தலா ஒரு கோல் அடித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதுவரை விளையாடிய 22 போட்டியில், 8 வெற்றி, 9 'டிரா', 5 தோல்வி என 33 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிய மோகன் பகான் அணி (16 வெற்றி, 5 'டிரா', 2 தோல்வி) 53 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
மேலும்
-
படித்த பள்ளியிலேயே திருடிய சிறுவர்கள் கைது
-
இரும்பு உருளை ஏற்றிய லாரி குன்றத்துாரில் கவிழ்ந்து விபத்து
-
மாரடைப்புக்கு முதலுதவி விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி
-
ஸ்டாலின் பிறந்த நாள் விழா 1,000 பேருக்கு பிரியாணி விருந்து
-
காணாமல் போன காவலாளி சடலமாக மீட்பு
-
லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா 'ஒலிம்பியாட்' ஹாக்கியில் அபாரம்